400 கிலோ தங்க நகைகள் ரூ.2 கோடி பணம் பறிமுதல்

திருமலை: அக். 25: தங்க வர்த்தகத்தில் 2வது மும்பை என்ற பெருமையை ஆந்திர மாநிலம், ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் உள்ள புரோதட்டூர் நகரம் பெற்றுள்ளது. புரோதட்டூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்க நகை உற்பத்தி மற்றும் நகைக்கடைகள் உள்ளன. கடந்த 21ம் தேதி புரோதட்டூரில் உள்ள 4 நகைக்கடைகளில் விஜயவாடா மற்றும் திருப்பதியை சேர்ந்த 40 வருமான வரித்துறை அதிகாரிகள்(ஐடி) 14 கார்களில் வந்து அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து நேற்று வரை 4 நாட்களாக சோதனை நீடித்தது.இதில் 400 கிலோ தங்கம், 350 கிலோ வெள்ளி மற்றும் ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.