
ஆப்கானிஸ்தா ன் அக். 11-
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4,00 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் 15,000த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்தது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது. ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெராட் நகருக்கு வட மேற்கே 40 கிமீ தொலைவில் இது மையம் கொண்டிருந்தது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 ஆக பதிவாகியிருந்தது. அதை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் 5.9 மற்றும் 5.5 என பதிவாகியது என தெரிவித்தது.
கடந்த 20 வருடங்களில் நடந்திராத மிக பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.5 நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து உள்ளதாகவும், மீட்கப்பட்டவர்களில் பலர் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த துயரம் தீர்வதற்குள் ஆப்கானிஸ்தானில் அதிகாலையிலேயே இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 6.11 மணியளவில் ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்பட்ட ஹெராட் பகுதியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.