407 ரன் குவித்து 16 வயது சிறுவன் சாதனை

சிவமொக்கா : நவம்பர் . 12 – மலைநாட்டின் பாலகன் ஒருவன் நியமிக்கப்பட்ட ஓவர்களில் நடந்த கிரிக்கெட் போட்டியொன்றில் தடாலடியாக 407 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளான். தன்னுடன் விளையாடிய வீரர்கள் 120 ரன்கள் எடுத்திருந்தனர். 16 வயதுக்குட்பட்டோர்க்குக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் சாகரா பகுதியை சேர்ந்த தன்மை மஞ்சுநாத் என்ற இளைஞன் இந்த அற்புத சாதனையை படைத்துள்ளான். தன்மை மஞ்சுநாத் வெறும் 165 பந்து வீச்சுகளில் 48 நான்கு மற்றும் 24 சிக்ஸர்கள் அடித்ததால் 407 ரன்களை குவித்துள்ளான். இதனால் 50 ஓவர்களுக்கான இந்த பந்தயத்தில் 583 ரன்கள் குவித்து தன்மை மஞ்சுநாத் புதிய சாதனையை படைத்துள்ளான். 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இவன்பங்கேற்றுள்ளான் . தவிர 16 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கு இவன் தலைவனாகியுமுள்ளான். இன்று சாகரா மற்றும் ஏ டி சி சி பதராவதி அணிகளுக்கிடையே நடந்த பந்தயங்களில் போது இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. தன்மை மஞ்சுநாத் நாகேந்திரா கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருவதாக கிரிக்கெட் அகாடமி பயிற்சியாளர் நாகேந்திரா பண்டித் தெரிவித்துள்ளார்.