43 ஆயிரம் துப்புரவு பணியாளர் நிரந்தரம்: முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூர்: செப்டம்பர். 23 – மாநிலம் முழுக்க உள்ள 43 ஆயிரம் துப்புரவு பணியாளர்களை அரசு ஊழியர் என நிரந்தரம் படுத்தப்படும் . இதில் முதல் கட்டமாக 11133 துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்துள்ளோம் . இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்யும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். துப்புரவு பணியாளர்கள் தினம் தொடர்பாக ரேஸ் கோர்ஸ் வீதியில் தன் வீட்டில் து ப்புரவு பணியாளர்களுடன் சிற்றுண்டி உண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் ஆக்கியதற்கு நன்றி தெரிவிக்க துப்புரவு பணியாளர்கள் தினமான இன்று துப்புரவு பணியாளர்கள் என் வீட்டுக்கு வந்திருந்தனர்.
பல வருடங்கள் கடுமையான உழைப்புக்கு பின்னர் இப்போது பலன் கிடைத்துள்ளது என்ற எண்ணத்தை அவர்கள் வெளிப்படுத்தினர் . துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்ததில் தற்போது தங்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு தற்போது வந்துள்ளது .
முன் வரும் நாட்களில் மீதமுள்ள பணியாளர்களை நிரந்தரம் ஆக்குவோம்.
இது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் சமுதாயத்தில் மிகவும் கடைசி பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்பவர்கள். மனிதாபிமானத்துடன் மற்றும் மாநில முதல்வராக என் கடமையை செய்துள்ளேன் . இவ்வாறு முதல்வர் பசவராஜ் கூறினார்.