
பெங்களூர் : நவம்பர். 13 – நகரில் மீண்டும் ஒரு தீ விபத்து நடந்திருக்கும் நிலையில் நேற்று நள்ளிரவு தகவல் தொழில் நுட்ப அலுவலகம் இருந்த ஐந்து மாடி கட்டிடத்தில் தீ பிடித்ததில் கட்டிடம் முழுதும் எரிந்து சாம்பலாகியுள்ள சம்பவம் பானசவாடியின் வெளி வட்ட சாலையில் நடந்துள்ளது . இந்த சாலையில் இருந்த கட்டிடத்தின் நிலப்பகுதி மற்றும் முதல் மாடியில் ஸ்டேன்லி பர்னிசர் மற்றும் இரண்டாவது மாடியில் காமெட் கோச்சிங் சென்டர் , மற்றும் 3 மற்றும் 4வது மாடியில் பிரேக் கண்ட்ரோல் மென் தொழில் நிறுவன அலுவலகம் இருந்த நிலையில் நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் தீ பிடித்து மொத்த கட்டடிடமும் தீக்கரையாகியுள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்று இரவு எந்த ஊழியரும் பணியில் இருக்கவில்லை. இங்கு பணியிலிருந்த இரண்டு செக்யூரிட்டி ஊழியர்களும் உயிர் தப்பித்து தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு ஊழியர்கள் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த செக்யூரிட்டி ஊழியர்களை பாதுகாப்புடன் வெளியே கொண்டு வந்துள்ளதுடன். இதனால் இந்த தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தற்செயலாக ஏற்பட்ட இந்த தீ விபத்தால் கட்டிடத்தில் இருந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனம் பர்னிசர் ஷோ ரூம் ஆகியவை முற்றிலும் எரிந்து சாம்பலாகி கோடிக்கணக்கில் பொருள்கள் நஷ்டமடைந்துள்ளது. நிலம் மற்றும் முதல் மடியில் ஸ்டான்லி பர்னிசர் , இரண்டாவது மடியில் காமெட் கோசிஜிங்க் சென்டர் மற்றும் மூன்று மற்றும் நான்காவது மாடிகளில் கண்ட்ரோல் மென் தொழில் நிறுவனம் அமைந்திருந்தது. இவை அனைத்தும் இந்த தீயின் விபத்தில் கருகி சாம்பலாகியுள்ளன. இந்த தீ விபத்திற்கு சரியான காரணம் இன்னும் தெரிய வரவில்லையென்றாலும் இதற்க்கு மின் கசிவே காரணாமாயிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது . நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.