5 ஆட்சியர்களும் ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: ஏப்.3- சட்டவிரோத மணல் குவாரி தொடர்பான விசாரணைக்கு திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர்ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் வரும் ஏப்.25-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு கட்டாயம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்து, அதன் மூலம் ஈட்டப்பட்ட பல கோடி ரூபாய் வருமானத்தை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்.12-ம் தேதி 34 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
நெகட்டிவ் இமேஜை கடந்து வருவாரா மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா? |அதன்படி, மணல் குவாரிகளின் மொத்த ஏஜென்ட்களான புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளின் வீடுகளில் நடத்திய சோதனையில்கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1,024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
முதன்மை பொறியாளர் ஆஜர்: இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசின் நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர்ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற விவரங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.சம்மனுக்கு இடைக்கால தடை: இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்தது.