5 கூண்டுகள் வைத்துசிறுத்தையை பிடிக்க தீவிர கண்காணிப்பு

பெங்களூர் :அக்டோபர் . 31 – நகரின் கூடலு கேட் மக்கள் நிறைந்த பகுதியில் மூன்று நாட்களாக சிறுத்தை ஒன்று திரிந்து வருகிறது . இங்குள்ள அபார்ட்மெண்ட் ஒன்றின் முதல் மாடி வரை சிறுத்தை சென்று வந்துள்ளது. வன துறை ஊழியர்கள் இந்த சிறுத்தையை பிடிக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டிருப்பினும் இவர்கள் கண்களுக்கு இன்னும் சிறுத்தை தென்படாததால் உள்ளூர் வாசிகள் கைகளில் மர திண்டுகளை பிடித்த படி பீதியுடன் திரிந்து வருகின்றனர். கூடலு கேட் அருகில் கடந்த அக்டோபர் 29 அன்று இரவு முதல் தென்பட்ட சிறுத்தை நேற்று இங்குள்ள ஒரு அபார்ட்மெண்டுக்குள் நுழைந்து முதல் மாடி வரை சென்று திரிந்துள்ளது . இதனால் பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இங்குள்ள சலார் பூரி காடேஞ்சா என்ற அபார்ட்மெண்டில் தென்பட்ட சிறுத்தை வாகன நிறுத்துமிடத்திலிருந்து நுழைந்து முதல் மாடி வரை சென்று திரிந்துள்ளது . நேற்று இரவும் இங்குள்ள ஐ டி தொழில்நுட்ப பூங்கா அருகில் சிறுத்தை தென்பட்டுள்ளது . சிறுத்தை வொயிட் பீல்டு மற்றும் கூடலு கேட்டுக்கு இடையே திரிந்தபடி உள்ளது. நேற்று இரவு சிறுத்தை திரிந்துகொண்டிருந்தது அருகில் உள்ள சில சி சி டி வி காமிராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சிறுத்தையை பிடிப்பதில் தீவிரமாயுள்ள vana துறை ஊழியர்கள் இது குறித்து இரவு முழுக்க ஒலி பெருக்கிகளில் அறிவிப்புகள் செய்து வந்ததுடன் பொது மக்கள் யாரும் இரவில் வெளியே வரவேண்டாம் என எச்சரித்துள்ளனர் . சிறுத்தை தென்பட்ட அபார்ட்மெண்டுக்கும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சிறுத்தையை பிடிக்க indha பகுதிகளில் இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பின்னர் அபார்ட்மெண்டில் செக்யூரிட்டி மற்றும் அங்கு வசிப்போருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். சிறுத்தை குறித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் யாரும் தனிமையில் நடமாடவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இரவு நேரத்தில் சிறுத்தை தென்பட்டால் உடனே வன துறைக்கு உடனே தகவல தெரிவிக்குமாறும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஹோசபாள்யாவில் சிறுத்தை தென்பட்டிருப்பதுடன் ஹோய்சலா வாகனத்தின் முன்னே ஓடி சென்றுள்ளது. ஹோய்சலா வாகனத்தின் சைரன் ஒலிக்க துவங்கியதில் ஒரு வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்திருப்பதுடன் பின்னர் போலீசார் பட்டாசுகள் வெடித்து சிறுத்தையை ஓட்டி உள்ளனர். தற்போதைக்கு நடவடிக்கையை நிறுத்தியுள்ள வன துறையினர் இன்று இரவு மீண்டும் சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். இந்த நடவடிக்கைக்காக 50 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது . கடந்த நான்கு நாட்களாக நகரின் சிங்காசந்திரா , சோமசுந்தரபால்யா , பரங்கிபால்யா , மற்றும் பண்டேபால்யா சுற்றுப்பகுதிகளில் சிறுத்தை திரிந்தபடி உள்ளது. இந்த சிறுத்தை பன்னேர்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்துள்ளதாக கருதப்படுகிறது . சிறுத்தையை பிடிக்க மேலும் நான்கு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 27 அன்று இரவு சிறுத்தை அபார்ட்மெண்ட் ஒன்றின் எதிரில் நடமாடிக்கொண்டிருந்தது சி சி டிவி காமிராக்களில் பதிவாகியுள்ளது. அன்று முதல் மீண்டும் சிறுத்தை தென்படவில்லை. எங்களிடம் இருப்பது சி சி டி விக்கள் மட்டுமே. இதனால் சிறுத்தயை பிடிக்க ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த குழுக்கள் 10 ஏக்கர் பரப்பளவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என நகரின் தலைமை vana அதிகாரி லிங்கராஜு தெரிவித்துள்ளார். சிறுத்தை பன்னேர்கட்டா வனப்பகுதியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் தென்பட்டுள்ளது சிறுத்தை மிருக வேட்டைக்காக வன பகுதியிலுருந்து வெளியே வந்துள்ளதாகவும் கருதப்படுகிறது. ஆனால் மீண்டும் வனப்பகுதிக்கே சென்றிருக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். சிறுத்தை தென்பட்ட இடங்களில் கால்நடை மருத்துவ குழுவினரும் நிறுவப்பட்டுள்ளனர் . இது ஆண் சிறுத்தை என தெரியவந்துள்ளது. ஆனாலும் சிறுத்தையின் வயது இன்னும் தெரிய வரவில்லை.