5 பேர் பலி

கம்பாலா, ஜன. 16-
உகாண்டாவின் எல்லையில் கிழக்கு காங்கோ நகரமான காசிண்டியில் உள்ள தேவாலயத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்றும், 15 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் அந்தோணி முஅலுஷாய் கூறுகையில், “இந்த சம்பவம் நேச நாட்டு ஜனநாயக படைகளால் (ADF) நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம். ஏடிஎப் என்பது உகாண்டா போராளிக் குழு ஆகும்.