5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடெல்லி அக்டோபர் 9-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் 5 மாநில தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று மதியம் அறிவித்தது. தெலுங்கானா ராஜஸ்தான் மத்திய பிரதேஷ் சத்தீஸ்கர் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி மற்றும் நவம்பர் 17ஆம் தேதி ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை 5 மாநிலங்களுக்கு வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும்.
தேர்தல் ஆணையம்
தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் இதை அறிவித்தனர்
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக நடைபெற உள்ள 5 மாநில தேர்தல்கள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த 5 மாநிலங்களிலும் தேர்தலை எதிர்கொள்வதற்கானப் பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் இன்று நண்பகல் 12 மணி அளவில் டெல்லியில் செய்தியளர்களைச் சந்தித்து ஐந்து மாநில தேர்தல் தேதி பாதுகாப்பு விபரம் பண பட்டுவாடா தடுப்பு குறித்து விளக்கமாக கூறினர்
தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியில் உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து அம்மாநிலத்தின் முதல்வராக கே. சந்திர சேகர ராவ் உள்ளார். இவரது 10 ஆண்டு கால ஆட்சி மீதான மக்களின் தீர்ப்பாக வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் கருதப்படுகிறது. தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு காங்கிரஸ் கட்சி கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், இம்மாநிலத்தில் பாஜகவும் தற்போது வலுவடைந்துள்ளது. எனவே, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் மும்முனைப் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சியில் உள்ளது. சத்தீஸ்கரிலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த மூன்று மாநில தேர்தல்களும் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், இந்த மாநிலங்களில் போட்டியே பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான். நாட்டின் இரு பிரதான தேசிய கட்சிகளுக்கு இடையேயான தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளதுமிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார். இங்கே, மிசோ தேசிய முன்னணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெற உள்ளன, வேட்பு மனு தாக்கல் எப்போது தொடங்குகிறது, தேர்தல் தேதி, வாக்குகளை எண்ணும் தேதி என அனைத்து விவரங்களும் அடங்கிய தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளார். இந்த அறிவிப்புகளை அடுத்து இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.