5-வது சம்மனையும் புறக்கணிக்கும் கேஜ்ரிவால் அரசை கவிழ்க்க சதி என குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிப். 2 டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஜனவரி 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் 2021- 2022ம் நிதியாண்டின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, 3-வது முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. சம்மனை வாங்க மறுத்த அர்விந்த் கேஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம். இந்த சம்மனை அமலாக்கத்துறை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.சில வாரங்களுக்கு முன்னதாக 4-வது முறையாக சம்மன் அனுப்பியது. அப்போதும் அவர் ஆஜராக நிலையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மியின் கட்சி தரப்பில் அஞ்சப்பட்டது. இந்த நிலையில்தான் புதன்கிழமை 5-வது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.
அந்த சம்மனில் வருகிற 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்றும் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்து டெல்லி அரசை கவிழ்ப்பதே பிரதமர் மோடியின் நோக்கம் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. தற்போது டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்னதாக 2023 ஆம் ஆண்டு நவம்பர் 2, டிசம்பர் 21 மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 3 மற்றும் ஜனவரி 18 ஆம் தேதிகளுக்கான அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை அரவிந்த் கேஜ்ரிவால் தவிர்த்துள்ளார்.