50 ரூபாய்க்கு நடந்த சண்டை கொலையில் முடிந்தது

பெங்களூர்: ஜூன். 22 – நண்பர்களுக்குள் வெறும் ஐம்பது ரூபாய்க்கு நடந்த சண்டை இளைஞன் ஒருவனின் கொலையில் முடிந்துள்ள சம்பவம் பசவேஸ்வரநகரின் குருபரஹள்ளி சர்க்கிள் அருகில் நேற்று இரவு நடந்துள்ளது. லக்கரேவை சேர்ந்த சிவமாது (24) என்பவன் கொலையுண்டவன். அவனுடைய நண்பன் ஷாந்தகுமார் இந்த கொலையை செய்து விட்டு தப்பியோடியிருப்பதுடன் அவனை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என டி சி பி டாக்டர் சஞ்சீவ் பாட்டில் தெரிவித்தார். கொலையண்ட சிவமாது மற்றும் குற்றவாளி ஷாந்தகுமார் இருவரும் நண்பர்கள். சிறு வயது முதலே ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள். இதே குருபரஹள்ளி சர்க்கிளில் சில வருடங்களுக்கு முன்னர் லக்கரே பாலம் அருகில் வீடு மாறி வந்தனர் . ஆனாலும் தங்கள் பழைய இடத்திற்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தனர். குற்றவாளி ஷாந்தகுமார் சோமட்டோ நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றிவந்தான். இறந்து போன சிவமாது ஆட்டோ ஓட்டிவந்தான். வழக்கம்போல் நேற்று குருபரஹள்ளி சர்க்கிள் வழியாக வந்த சிவமாது , ஷாந்தகுமார் மற்றும் நண்பர்கள் அருகில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளனர். கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்தவர்கள் ஏதோ வேலைக்கென்று இரவு 8.30 மணியளவில் சர்க்கிள் அருகில் உள்ள சைபர் மையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ஷாந்தகுமார் ஜேபியிலிருந்து சிவமாது 50 ரூபாய் எடுத்துள்ளான். அதை கொடுக்குமாறு கேட்ட ஷாந்தகுமாரை நான் கொடுக்க மாட்டேன் என்ன இப்போது என சிவமாது நட்புடனேயே சகஜமாக கேட்டுள்ளான். அப்போது இருவருக்குள் வாக்கு வாதம் முற்றியுள்ளது. தன்னுடன் வைத்திருந்த கத்தியை எடுத்து ஷாந்தகுமார் சிவமாதுவின் மார்பில் குத்தி உள்ளான். பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். தீவிர ரத்த சோகையால் கீழே விழுந்த சிவமாதுவை நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனளிக்காமல் அவன் இருந்துள்ளான். சம்பவ இடத்திற்கு பசவேஸ்வரநகர் போலீசார் வாந்தி பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர் அக்கம்பக்கத்து சி சி டி வி காட்சி பதிவுகளை கொண்டு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். என டி சி பி சஞ்சீவ் பாட்டில் தெரிவித்தார்.