50 ரூபாய் தகராறில் ஒருவர் கொலை

ஹாசன்,பிப். 15‍: நண்பர்களிடையே ரூ. 50க்கு ஏற்பட்ட தகராறு, கொலையில் முடிந்துள்ள சம்பவம் சென்னராயபட்டண மாவட்டத்தில் சிரவணபெளகொள ஹோபளிய அருவனஹள்ளியில் நடந்துள்ளது. ராமச்சந்திர சஞ்சீவப்பன் (42) படுகொலை செய்யப்பட்டவர். குற்றத்தைச் செய்த ருத்ரய்யா கொங்கவாடா ராமச்சந்திரா கைது செய்யப்பட்டார்.
ருத்ரய்யா மற்றும் ராமச்சந்திரா ஆகியோர் பாகல்கோட் மாவட்டம், பாதாமி டவுன் காக்கிப்பேட்டை குடிசைப்பகுதியில் வசிப்பவர்கள். இருவரும் இரண்டு வாரங்களுக்கு முன்பு அருவனஹள்ளி கிராமத்தில் உள்ள கேபிஐ செங்கல் தொழிற்சாலையில் கூலி வேலை செய்ய வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். மதுபோதையில் ரூ. 50க்காக‌ நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு காரணமாக ராமச்சந்திராவை ருத்ரய்யா தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவ இடத்திற்கு வந்த சரவணபெலகொலா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ருத்ரய்யாவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.