58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

டெல்லி:மே 25:
6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 18வது மக்களவை தேர்தல் ஏப்.19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டமாக நடக்கிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. 428 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 6வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 6 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை தேர்தல் நடக்கிறது.
இந்த 58 தொகுதிகளிலும் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 11.13 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1.14 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளனன. 11.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகார் 9.66%, அரியானா 8.31%, – ஜம்மு- காஷ்மீர் 8.89%, ஜார்க்கண்ட் – 11.74%, டெல்லி 8.94%, ஒடிசா 7.43%, உத்தரப் பிரதேசம் 12.33%, மேற்குவங்கம் 16.54% வாக்குகள் பதிவாகி உள்ளன
மக்களவை தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 6-ம் கட்ட மக்களவை தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (25.05.2024) தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்குவங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும்.
நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும். மக்கள் காலையில் இருந்தே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.