
பெங்களூரு, மார்ச் 15 –
5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.10 நாட்களுக்கு பிறகு தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வை ரத்து செய்து உயர்நீதிமன்ற ஒரு நபர் பெஞ்ச் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தனி உறுப்பினர் பெஞ்ச் உத்தரவுக்கு தடை விதித்த டிவிஷன் பெஞ்ச், வாரியத் தேர்வை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
10 நாட்களுக்குப் பிறகு தேர்வு நடத்தப்பட வேண்டும். தேர்வு மார்ச் 27 முதல் தொடங்க வேண்டும். ஆனால் எந்த ஒரு மாணவரும் பெயில் ஆக கூடாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் நரேந்தர், அசோக் கினகி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இந்த உத்தரவை பிறப்பித்தது.
குஸ்மா தரப்பில் வக்கீல் கே.வி.தனஞ்சயவும், அரசு தரப்பில் ஏ.ஏ.ஜி.தியன்சின்னப்பாவும் வாதிட்டனர். மார்ச் 13ம் தேதி தொடங்க இருந்த 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து ஏற்கனவே உயர் நீதிமன்ற ஒரு நபர் அமர்வு உத்தரவிட்டு இருந்தது.ஒரு சாதாரண வருடாந்திர தேர்வு வழக்கம் போல் நடத்தப்பட வேண்டும். பள்ளி அளவிலேயே மதிப்பீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதை கேள்விக்குட்படுத்தி அரசு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது