58 வயதில் ஊழியர் ஓய்வு கேஎஸ்சிஏவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பெங்களூர் : நவம்பர். 11 – மாநிலத்தில் ஓய்வு பெரும் வயது 60 என்றிருப்பினும்
58 வயதில் ஊழியர் ஒருவரை ஓய்வு பெற செய்துள்ளது குறித்து கர்நாடக மாநில கிரிக்கெட் ஆணையத்திற்கு ( கே எஸ் சி ஏ ) உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கால அவகாசத்திற்கு முன்னரே ஓய்வு பெற செய்ததை கேள்வி எழுப்பி கே எஸ் சி ஏவின் 58 வயதான ஊழியர் ஜெ ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எஸ் ஜி பண்டித் உட்கொண்ட ஒரு நபர் அமர்வு பிரதிவாதிகளான தொழிலாளர்துறை மற்றும் கே எஸ் சி ஏவிற்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை ஒத்திவைத்துள்ளது. மனுதாரருக்கு 58 வயதுகள் நிரம்பியுள்ளதாக தெரிவித்து கே எஸ் சி ஏ கடந்த 2022 மார்ச் 13 அன்று கடிதம் அனுப்பி ஓய்வு பெறுமாறு தெரிவித்திருந்தது. இதற்க்கு பதிலளித்த மனுதாரர் தன்னுடைய ஓய்வு அறிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என 2022 ஜூலை 11 அன்று கே எஸ் சி ஏவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் கே எஸ் சி ஏ இந்த கோரிக்கையை மறுத்திருப்பதுடன் இதனால் மனுதாரர் உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
தனியார் நிறுவனங்களில் ஓய்வு பெரும் வயது 58 லிருந்து 60 க்கு உயர்த்தும் விஷயம் குறித்து கர்நாடகா கைத்தொழில் நியமங்கள் 1961சட்ட விதிகளை திருத்தும் செய்து மாநில அரசு 2017 மார்ச் 27 அன்று உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்க்கது.