6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

பெங்களூர், நவ.21- பெங்களூரில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் ஏராளமான தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூர் சிட்டி மார்க்கெட் அருகே போலீசார் இன்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி சோதனை நடத்திய போது ஏராளமான தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது ஆனால் இதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை இவைகளை ஒரு தங்க நகை கடைக்கு எடுத்துச் செல்வதாக கூறினர் ஆனால் அதற்கு ஆவணங்கள் இல்லை. இந்த தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரையும் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
தங்க நகைகள் மொத்தம் 6 கிலோ இருப்பது தெரியவந்தது. பெரிய 65 நெக்லஸ், நூற்றுக்கணக்கான வளையல்கள் தங்க சங்கிலிகள் உள்ளிட்ட நகைகள் இதில் இருந்தன. முதலில் இது போலி நகைகள் என நினைத்தனர். ஆனால் பரிசோதனையில் இவை அனைத்தும் அசல் தங்கம் என தெரியவந்துள்ளது. இதைமும்பையில் இருந்து கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்தது இது குறித்து மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.