6 கூலி தொழிலாளர்கள் மூழ்கி சாவு

பெல்லாரி : செப்டம்பர். 14 – வழக்கம் போல் ஆட்டோவில் உட்கார்ந்து கூலி வேலைக்கு புறப்பட்ட இந்த மாவட்டத்தின் கொலக்கல்லு என்ற கிராமத்தை சேர்ந்த ஆறு கூலி தொழிலாளிகள் இருந்த ஆட்டோ துங்கபத்திரா கால்வாயில் உருண்டு விழுந்ததில் ஆறு பேர் இறந்திருப்பதுடன் ஐந்து பேர் உயிர் தப்பியுள்ள சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. இந்த துயர சம்பவத்தில் துர்கம்மா (35) , மற்றும் அவருடைய உறவினர் நிங்கம்மா (34) , மற்றும் 16 வயது புஷ்பாவதி ஆகியோரின் சடலங்கள் கிடைத்துள்ளது . ஹோஸபேட்டே லட்சுமி (36) , நாகரத்தினா , ஹீடிகர ஹுலிகெம்மா (26) , ஆகியோரின் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆட்டோ ஓட்டுநர் பீமப்பா (38) , மற்றும் அவருடன் இருந்த மஹேஷ் (14) , ஆட்டோ விழுந்த உடனேயே அலறியுள்ளனர். அருகிலிருந்த சிலர் வந்து ஹேமாவதி (32) , தம்மூரு எர்ரம்மா (36) , மற்றும் ஷில்பா (16) ஆகியோரை காப்பாற்றியுள்ளனர். கொலக்கல்லு கிராமத்திலிருந்து காலை 7.30 மணியளவில் ஆட்டோ ஓட்டுநர் ஈடிகர பீமப்பா வழக்கம்போல் பத்து கூலி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கிராமத்தின் புற பகுதியில் உள்ள துமட்டி கவியப்பா என்பவரின் நிலத்தில் கூலி வேலைக்கு அழைத்து சென்றுகொண்டிருந்தார். துங்கபத்திரா மேல்மட்ட (ஹெச் எல் சி) கால்வாயில் கரை மீது சென்றுகொண்டிருந்தபோது சூஜி குடடா மார்க்கத்திலிருந்து கால்வாயின் வல புறம் சென்றுள்ளார். சாலை மீதிருந்த கல் மீது ஆட்டோவை ஒட்டியபோது அது நிலை தடுமாறி உருண்டுள்ளது . என ஆட்டோவில் இருந்த ஹேமாவதி தெரிவித்தார். ஆட்டோ நீரில் விழுந்த உடனேயே ஓட்டுநர் ஓடி விட்டான். . ஆனால் அக்கம் பக்கத்து நிலங்களில் இருந்த மக்கள் ஓடி வந்து கிராமத்து மக்களுக்கு தகவல் தெரிவித்து அதன் பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு ஊழியர்கள் வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கால்வாயில் விழுந்த புஷ்பாவதியை நீரில் இருந்து வெளியே எடுத்த போது அவர் உயிருடன் இருந்தார். ஆனால் அதிகளவில் தண்ணீரை குடித்திருந்ததால் அவரை விமஸ் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும்போது வழியிலேயே அவர் இறந்துள்ளார்.