60 லட்சம் வாக்காளர் தகவல் சேகரிப்பு

பெங்களூர் : நவம்பர். 19 –
பெங்களூரில் வாக்காளர்கள் பட்டியளுக்கு தனியார் நிறுவனமான செலுமே நிறுவனம் குறிவைத்து வாக்காளர்களின் தனி விவரங்களை விற்பனை செய்துள்ள மோசடி மிக அதிக அளவில் இருப்பதுடன் செலுவே நிறுவனம் சுமார் 60 லட்ச வாக்காளர்களின் ஒட்டு மொத்த தகவல்களை சேகரித்துள்ளது என்ற பயங்கர விவரங்கள் வெளிவந்துள்ளன. பெங்களூரின் 90 லட்ச வாக்காளர்களில் 60 லட்ச வாக்காளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருப்பதுடன் பெங்களூரின் 28 தொகுதிகளின் வாக்குச்சாவடிகள் அளவில் வாக்காளர்களின் பெயர்கள் , மொபைல் எண்கள் , பணி விவரங்கள் , ஜாதி , கடந்த முறை யாருக்கு எவ்வளவு வாக்குகள் போடப்பட்டது , எந்தெந்த வாக்கு சாவடியில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர்,
ஆகிய தகவல்களை செலுமே நிறுவனம் சேகரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செலுமே நிறுவனத்திற்கு எதிராக மாநகராட்சி புகார் பதிவு செய்த உடனேயே போலீசார் மல்லேஸ்வரத்தில் உள்ள செலுமே நிறுவனத்தில் சோதனைகள் நடத்தி இரண்டு பேரை கைது செய்து ஆதாரங்களை கைப்பற்றியுள்ளனர் . போலீசார் கைப்பற்றியுள்ள ஆவணங்களில் சில தகவல்கள் கிடைத்திருப்பதுடன் செலுமே நிறுவனம் 60 லட்ச வாக்காளர்களின் தகவல்களை சேகரித்துள்ளதாக தெரியவருகிறது. செலுமே நிறுவனத்திற்கு வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் பதிவிடுதல் மற்றும் வாக்காளர்களுக்கு வாக்களிக்க விழிப்புணர்பு ஏற்படுத்தும் பொறுப்புகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த நிறுவனம் வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தற்போது குற்றம்சாட்டிவருகின்றன. வாக்காளர்கள் பட்டியல் திருத்த பணிகளில் மோசடிகள் நடந்திருப்பதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே வேளையில் 2018 முதல் செலுமே நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தரும் குத்தகையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. செலுமே நிறுவனம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு மூட்டுவதற்கு பதிலாக வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்ததன் வாயியிலாக மாநகராட்சி கொடுத்துள்ள அனுமதியை துஷ்ப்ரயோகம் செய்துள்ளது தவிர போலி அடையாள அட்டைகளையும் தயாரித்துள்ளது என்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகள் நடந்து வருகிறது.