7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற நர்சு இந்திய வம்சாவளி டாக்டர் உதவியால் சிக்கினார்

லண்டன், ஆக 19- இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. ஆஸ்பத்திரியில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது. தொடர்பான புகாரின் பேரில் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்சு, சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெரிந்தது. இதுபோன்ற சம்பவங்களின் போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.
இதையும் படியுங்கள்: தைவானை சுற்றி சீனா மீண்டும் போர் பயிற்சி விசாரணையின் போது குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நான் ஒரு பாவி, இதற்கு நான்தான் காரணம் இன்று உங்கள் பிறந்த நாள். நீங்கள் இங்கு இல்லை.
அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் போன்ற வாசகங்களை எழுதியிருந்தார். இதையடுத்து நர்சு லூசி லெட்பி 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.