7 பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை 2 டாக்டர்கள் மீது புகார்

பெங்களுர் : ஜனவரி. 12 – நகரின் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் 7 பெண் ஊழியர்களுக்கு பாலியல் பலாத்காரம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது . மருத்துவர்கள் கெம்பராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் தங்களுக்கு பலமுறை பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டி மருத்துவ கல்வி துறை அமைச்சருக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் கடிதம் எழுதி புகார் அளித்துள்ளனர். இவர்கள் இரண்டு மருத்துவரும் பெண் மருத்துவச்சிகள் , செவிலியர்கள் மற்றும்இதர ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதாக குற்றங்சாடப்பட்டுள்ளது . இந்த மருத்துவர்கள் இருவரும் தங்களுக்கு சில செல்வாக்குள்ளவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆதரவு இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை இவர்களுக்கு எதிராக எந்த புகாரும் தெரிவித்திருக்கவில்லை. என்றும் இவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் . தவிர இந்த புகார்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மற்றும் இதற்கென குழு ஒன்றை நியமித்திருப்பதாகவும் மருத்துவ கல்வி இயக்குனர் முனைவர் சுஜாதா ராத்தோட் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 23 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குழுவில் முன்னர் பெங்களூர் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆய்வு மையத்தின் பதிவாளர் முனைவர் அஸீமா உட்பட மூன்று உறுப்பினர்கள் இருந்துள்ளனர். ஆனால் தற்போது அசீமாவிற்கு பதிலாக மற்றொரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழு அமைக்கப்பட்டபோது ஒரே மையத்தை சேர்ந்த இரண்டு பேர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வாக ஒருவர் நீக்கப்பட்டுள்ளார் பின்னர் மருத்துவக்கல்வி துறை கூடுதல் இயக்குணர் குழுவில் சேர்க்கப்பட்டார். இப்போது இந்த குழுவில் ஒரு பெண் உறுப்பினர் உள்ளார். மருத்துவக்கல்வி இயக்ககத்தின் தலைமை மருத்துவ அதிகாரி, மருத்துவ கல்வி துரையின் இணை இயக்குனர் மற்றும் பி எம் சி ஆரின் மூத்த அதிகாரி ஆகியோரை கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்து ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது . இந்த அறிக்கைக்கு பின்னர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுஜாதா ராதோட தெரிவித்தார். இது குறித்து மருத்துவர் ஸ்ரீகாந்த் கூறுகையில் எனக்கு எதிரான புகார்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது . அனால் இந்த புகார்களில் எவ்வித உண்மையும் இல்லை. மற்றும் ஆதாரமற்றவை . மருத்துவமனையில் உள்ள சில விஷமிகள் ஊழியர்கள் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இப்படி புகார் அளித்து என் தொழிலை கெடுக்க முயற்சி செய்துள்ளனர் . தவிர மருத்துவக்கல்லூரியில் நிர்வாக கட்டிடம் அமைய உள்ள நிலையில் பலரும் உயர் பதவிக்கு போட்டிபோட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் நடந்துள்ளது என கெம்பராஜ் தெரிவித்தார்.