7 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு

பெங்களூர், ஜன. 13- அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 4 மணிக்கு அமாவாசை முடிந்து
ஏழு பேர் அமைச்சராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் இன்று நடைபெறுகிறது.
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் 7 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் இதில் மூத்த எம்எல்ஏக்கள் அரவிந்த லிம்பாவளி, முருகேஷ் நிராணி, எஸ். என். அங்கார்.
எம்எல்சிகளான எம். டி.பி நாகராஜ், ஆர். சங்கர் ஆபரேஷன் கமலா திட்டத்தை முன் நின்று முக்கிய பங்கு வகித்த யோகேஷ்வர் ஆகியோர் இன்று 4 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு விழாவில் பதவி ஏற்கிறார்கள்.
இவர்களுக்கு கவர்னர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சுள்ளியா
தொகுதியில் 6 முறை எம்எல்ஏவாக தேர்வானவர் அங்காரா அவருக்கு முதல் முறையாக அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. ஏற்கனவே கலால் துறை அமைச்சராக இருந்த நாகேஷ் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார். அவரை அழைத்து முதல்வர் எடியூரப்பா ஆறுதல் கூறியுள்ளார்.


ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி எம்எல்ஏ முனி ரத்னாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் சில பிரச்சனைகள் காரணமாக தவிர்க்க பட்டதாக தெரிகிறது.
அவரை அமைச்சர் அசோக் தனது வீட்டுக்கு அழைத்து சமரசம் செய்துள்ளார். உள்துறை அமைச்சர் சிவராஜ் பொம்மையும் அவருக்கு சமாதானம் செய்து வைத்ததாக தெரிகிறது.
இன்று மாலை 4 மணிக்கு பெங்களூர் கவர்னர் மாளிகையில் அமைச்சரவை விரிவாக்கம் விழா கோலாகலமாக நடைபெறுகிறது.