
பெங்களூர், ஜன 13.-
மாநில மந்திரிசபை இன்று விஸ்தரிக்கப்பட்டது. முதல்வர் . எடியூரப்பா தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார்.
கவர்னர் மாளிகை கண்ணாடி இல்லத்தில் நடைபெற்ற எளிய விழாவில் உமேஷ் கத்தி அரவிந்த் லிம்பாவலி, எம்டிபி நாகராஜ், முருகேஷ் நிராணி, ஆர்.சங்கர்,
சி.பி. யோகேஸ்வர், எஸ்.அங்காரா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்..இவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா சத்திய பிரமாணம் செய்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பிஜேபி தலைவர்கள் பங்கேற்றனர் புதிய அமைச்சர்களின் ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்