70 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் சிறுத்தைகள்

போபால், செப்.16 நமீபியாவில் இருந்து சார்ட்டர் சரக்கு விமானம் (போயிங் 747) மூலம் 8 சிறுத்தைகள் மத்திய பிரதேச மாநிலம் குனோ-பால்பூர் தேசிய பூங்காவுக்கு கொண்டு வரப்படும். இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ‘சீட்டா’ ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதேநேரம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்குகிறது. 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கிய இந்த குழு, விமானம் மூலம் நமீபியாவில் இருந்து நாளை காலையில் டெல்லி கொண்டு வரப்படுகின்றன. பின்னர் ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.