71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி

டெல்லி நவம்பர் 22 – மத்திய அரசின் ரோஜ்கார் மேளா என்கிற வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், சுமார் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை 71 ஆயிரம் பேருக்கும் காகித வடிவிலான பணி நியமன கடிதங்கள், நாடு முழுவதும் 45 இடங்களில் நேரடியாக வழங்கப்பட்டன. வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டை இது காட்டுவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இது தூண்டுகோலாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைன் புத்தாக்க பயிற்சி திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.