சென்னை : ஜூலை 1 –
எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 72,943 பேர் விண்ணப்பித்து உள்ளதாக, மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 9,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு, 496 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.