‘75 நாள் இலவசம்’ திட்டத்தில் 9½ கோடி பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது

புதுடெல்லி , ஆக.27 – நாட்டில் 65 வயதை தாண்டியவர்களுக்கும், முன்கள, சுகாதார பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வந்தது. இந்தநிலையில், சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
கடந்த ஜூலை 15-ந் தேதி தொடங்கிய இத்திட்டம், செப்டம்பர் 30-ந் தேதிவரை அமலில் இருக்கும். இதற்காக நாடு முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கி, நேற்று 42-வது நாள் ஆகும். இந்த 42 நாட்களில் 9 கோடியே 60 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இதுவரை 14 கோடியே 70 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பு நாள் ஒன்றுக்கு 11 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. 27 லட்சத்து 77 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதுபோல், நாள் ஒன்றுக்கு சராசரியாக செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசிகள் 22 லட்சத்தை கடந்துள்ளது.

https://www.maalaimalar.com/news/national/indians-drinking-less-but-more-men-are-making-alcohol-a-habit-504818?infinitescroll=1