78 நாடுகளுக்கு பரவிய குரங்கு அம்மை

ஜெனிவா: ஜூலை. 28 -உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளதாக கூறியுள்ள உலக சுகாதார மையம், ஐரோப்பிய நாடுகளில் நோய் பரவல் தீவிரமடைந்து வருவதாக எச்சரித்திருக்கிறது. கொரோனா பரவலுக்கு இடையே குரங்கு அம்மை தொற்றும் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகி வருகிறது. ஜெனிவாவில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், இதுவரை 78 நாடுகள் மூலம் உலக சுகாதார அமைப்பிற்கு 18 ஆயிரத்திற்கும் கூடுதலான குரங்கு அம்மை பாதிப்பு பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
இந்த பாதிப்புகளில் 70 சதவீதம் ஐரோப்பிய நாடுகளிலும், 25 சதவீதம் அமெரிக்காவிலும் ஏற்பட்டு உள்ளன.