8 சிறுத்தைகள் எவை தெரியுமா? மல்லிகார்ஜுன கார்கே தாக்கு

புதுடெல்லி, செப். 20
ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேசத்தில் உள்ள குணோ தேசிய பூங்காவில் விடுவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி அரசு கொண்டுவந்த 8 சிறுத்தைகள் இவைதான் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கட்சியின் எம்.பி.யான மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக கார்கே வெளியிட்டுள்ள டுவிட்டரில், வேலையின்மை, பணவீக்கம், வறுமை, பட்டினி, வகுப்புவாதம், வெறுப்பு, வன்முறை, அடக்குமுறை ஆகிய இந்த எட்டு சிறுத்தைகளும் மோடி அரசால் இந்திய மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன என பதிவிட்டுள்ளார்.