8 வயது மகளின் கழுத்து அறுத்து கொன்று, விஞ்ஞானி தற்கொலை

சண்டிகர் (ஹரியானா), மார்ச்.11- ஹிசாரில் உள்ள லாலா லஜ்பத் ராய் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஒருவர் தனது 8 வயது மகளின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
விஞ்ஞானி சந்தீப் கோயல் (35) மற்றும் அவரது 8 வயது மகள் ஆகியோரின் உடல்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டன. மன உளைச்சலில் இருந்த கோயல் தனது மகளின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹரியானாவில் உள்ள லாலா லஜ்பத் ராய் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் துறையில் பேராசிரியராக இருந்தார். இளம் விஞ்ஞானியான இவர், கடந்த சில மாதங்களாக மன உளைச்சலுக்கு ஆளானார். அவரும் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனது மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் சந்தீப் கோயல் மற்றும் அவரது மகள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி தடயவியல் ஆய்வக நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஹிசார் ஏஎஸ்பி ராஜேஷ் மோகன், சந்தீப் கோயல் மன உளைச்சலுக்கு அவரது சக ஊழியர்களால் சிகிச்சை அளித்து வந்த‌தாக தெரிவித்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு 2 பேரின் உடள்களையும் சந்தீப் கோயலின் மனைவியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.