
பெங்களூரு, மே 25-தொட்டபள்ளாப்பூரில் உள்ள முத்தாலம்மா கோவில் திருவிழா கண்காட்சியில் ஏர் பலூன் ஜம்பிங் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. சிறுவன் உயிரிழந்ததால், விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்
தொட்டபள்ளாப்பூர் சாந்திநகரைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவரின் மகன் ஸ்ரேயாஸ் என்பவர் உயிரிழந்தார். மஞ்சுநாத் கடை நடத்தி வருகிறார். ஸ்ரேயாஸ் 7ம் வகுப்பு படித்து வந்தார். இரவில் அம்மாவுடன் இரண்டு நாட்களாக இங்கு நடந்து வரும் கண்காட்சிக்கு சென்றுள்ளார்.
கண்காட்சியில் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக போடப்பட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டார். ஏர் பலூன் ஜம்பிங் செய்யும் போது ஸ்ரேயாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பீதியடைந்த தாய் மற்றும் பொதுமக்கள் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், உயிர்ப்பறவை ஏற்கனவே பறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார்.
பெற்றோர்களின் குற்றச்சாட்டு: ஆண்டுதோறும் திருவிழா கடந்த 2 நாட்களாக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் பொழுதுபோக்கிற்காக பல வகையான விளையாட்டுகள் வைக்கப்படுகின்றன.
கண்காட்சி நடக்கும் இடத்தில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யவில்லை ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் கண்காட்சியில் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை. சரியான நேரத்தில் முதலுதவி அளிக்காததால், எங்கள் மகன் இறந்து விட்டான்,” என, பெற்றோர் குற்றம் சாட்டினர்.
ஜாத்ரா சேவா சமிதியின் அலட்சியமே அவரது மகனின் மரணத்துக்குக் காரணம். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படையை வரவழைக்க வேண்டியிருந்தது. சம்பவம் நடந்த உடனேயே சிறுவனுக்கு முதலுதவி அளித்திருந்தால், அவன் உயிர் பிழைத்திருப்பான். மக்களை பாதுகாக்க எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், வெறும் பணத்துக்காக பல்வேறு விளையாட்டுகளை நடத்த அனுமதித்துள்ளனர் கண்காட்சி அமைப்பாளர்கள், என்று அவர்கள் குற்றம் சாட்டினர்