95 சதவிகிதம் தற்போதைய எம்எல்ஏக்களுக்கே டிக்கெட்

ஹூப்பள்ளி, ஜன.2- வரும் சட்டசபை தேர்தலில் 95 சதவீத சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட்டு வழங்கப்படும் என கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கட்சியில் மேட்ச் பிக்சிங் கிடையாது. கோஷ்டிகள் எதுவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதற்கட்ட பட்டியல் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
காங்கிரஸில் சீட்டுக்காக சண்டையே இல்லை. ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் தொகுதிகளில் பலத்த போட்டி கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.
அரசியலில் எதுவும் நடக்கலாம். கட்சியில் இருந்து விலகியவர்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பம் அளித்தால் தகவல் தருவதாக கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
முன்னாள் அமைச்சர் சந்தோஷ் லாட் தேசிய தலைவர். தேர்தலில் போட்டியிடாமல் என்னையும், சித்தராமையாவையும் ஓய்வெடுக்குமாறு கேட்டு கொண்டுள்ளார் அவரது ஆலோசனையை நான் தீவிரமாக எடுத்துக் கொள்கிறேன் என்று கிண்டலாக பதிலடி கொடுத்தார்