96 கோடி வாக்காளர்கள்

டெல்லி ஜன.27-
நாடாளுமன்றத் தேர்தலில் 96 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 1.73 கோடிக்கும் மேற்பட்டோர் இளையோர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. முக்கியமாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றது. அதன்படி நாடு முழுவதும் 96 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
மொத்த வாக்காளர்களில் 1.73 கோடிக்கு மேற்பட்டோர் 18-19 வயது பிரிவை சேர்ந்தவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 47 கோடி பெண்கள் வாக்காளர்கள், 18 லட்சம் பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.