காங்கிரஸுக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை: மோடி குற்றச்சாட்டு

தாரங்: செப். 15-
சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். ஒவ்​வொரு கடையிலும் சுதேசி பொருட்​களை மட்​டுமே விற்​பனை செய்ய வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார்.
மிசோரம், மணிப்​பூர், அசாம் மாநிலங்​களில் பல்​வேறு அரசு நலத்​திட்​டங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று முன்​தினம் தொடங்​கி​வைத்​தார். அன்​றைய தினம் இரவு அசாமின் குவாஹாட்டி நகரில் அவர் தங்​கி​னார்.
இதைத் தொடர்ந்து அசாமின் தாரங் நகரில் நேற்று காலை நடந்த விழா​வில் ரூ.18,530 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி அடிக்​கல் நாட்​டி​னார். சில திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: நான் தீவிர சிவ பக்​தன். என் மீது அவதூறுகள் அள்ளி வீசப்​படு​கின்​றன. இதை சகித்​துக் கொள்​கிறேன். என் மீது உமிழப்​படும் விஷத்தை விழுங்கி விடு​கிறேன். ஆனால் அசாமின் புகழ்​பெற்ற பாடகர் பூபேன் அசா​ரிகா மீது காங்​கிரஸார் அவதூறுகளை அள்ளி வீசுவதை என்​னால் ஏற்​றுக் கொள்ள முடி​யாது. இதற்கு அசாம் மக்​கள் தகுந்த பாடம் கற்​பிப்​பார்​கள்.
கடந்த 1962-ம் ஆண்டு இந்​தி​யா, சீனா இடையே போர் நடை​பெற்​றது. இதன்​பிறகு அப்​போதைய பிரதமர் நேரு கூறிய வார்த்​தைகள், வடகிழக்கு மாநில மக்​களை காயப்​படுத்​தி​யது. அந்த காயங்​கள் இன்​று​வரை ஆறவில்​லை.
காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் ஊடுரு​வல்​காரர்​கள், தேச​விரோ​தி​களுக்கு முழு ஆதரவு அளிக்​கப்​பட்​டது. பாகிஸ்​தானின் பொய்​களை, அந்த கட்சி தனது கொள்​கைகளாக பின்​பற்றி வரு​கிறது. ஆபரேஷன் சிந்​தூரின்​போது இந்​திய ராணுவத்​துக்கு காங்​கிரஸ் ஆதரவு அளிக்​க​வில்​லை. அதற்கு நேர்​மாறாக பாகிஸ்​தான் ஆதரவு பெற்ற தீவிர​வா​தி​களுக்கு அந்த கட்சி ஆதரவு அளித்​தது. காங்​கிரஸ் குறித்து இந்​தி​யர்​கள் மிகுந்த எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும்.
அந்த கட்​சியை பொறுத்​தவரை வாக்கு வங்​கிக்கு மட்​டுமே முக்​கி​யத்​து​வம் அளிக்​கிறது. நாட்டு நலனில் துளி​யும் அக்​கறை கிடை​யாது. இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த லட்சியத்தை எட்ட வடகிழக்கு முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கொள்கின்றனர். இது சுதேசி பொருட்களுக்கு கிடைக்கும் மரியாதை. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் அப்போதுதான் நாட்டின்பொருளாதாரம் அபரிதமாக வளர்ச்சி அடையும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.