விக்கெட்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ்

அகமதாபாத், அக். 2- இந்தியா – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி, குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. வரும் 6ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறும்.
அதைத் தொடர்ந்து, 2வது டெஸ்ட் போட்டி, அக். 10ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன், கடந்த 2023ம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் மண்ணில்,
இந்திய அணி எதிர்கொண்டது. அப்போது, 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.இம்முறை, ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை இந்திய மண்ணில் எதிர்கொள்கிறது. சமீப காலமாக, இந்திய அணி எதிர்கொண்ட போட்டிகளில் மகத்தான வெற்றிகளை குவித்து அசைத்து பார்க்க முடியாத சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. அதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி, பெரியளவில் சவால்களை எதிர்கொள்ளும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.இந்திய அணியில் சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, ஜெகதீசன், முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), வாரிகன் (துணை கேப்டன்), கெவ்லோன் ஆண்டர்சன், அதனேஸ், கேம்ப்பெல், தகநரைன் சந்தர்பால், கிரீவ்ஸ், ஹோப், டெவின் இம்லாக், அல்ஸாரி, பிரண்டன் கிங், ஆண்டர்சன் பிலிப், காரி பியரி, சீல்ஸ் ஆகியோர் உள்ளனர்.