பிரசாந்த் கிஷோர் முக்கிய தகவல் ஆட்டம் காணும் பீகார் தேர்தல் களம்

பாட்னா: நவம்பர் 10-பீகார் சட்டமன்ற தேர்தல் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. நிதிஷ் பாஜக கூட்டணி, தேஜஸ்வி காங்கிரஸ் கூட்டணி களத்தில் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. அவர்களுடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஜன்சுராஜ் என்கிற கட்சி மூலம் தேர்தலை சந்திக்கவுள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து மனம் திறந்துள்ள பிரசாந்த் கிஷோர், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி இல்லவே இல்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த நவம்பர் 6 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. 64.66 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது. நாளை (நவம்பர் 11) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.பீகார் தேர்தல் களம் தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை பீகாரில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. சுமார் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பீகாரில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது. மறுபக்கம் ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது. அதேபோல பிரபல தேர்தல் வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோரும் களத்தில் உள்ளார். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் பீகார் தேர்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
பிரசாந்த் கிஷோர் அரசியல் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் நிதிஷ்குமாரின் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன. ஜேவிசி வெளியிட்ட கணிப்பில் அந்தக் கூட்டணி 120-140 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேஜஸ்வியின் ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி 93 – 112 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.