Home விளையாட்டு அபிஷேக் சர்மா முதலிடம்

அபிஷேக் சர்மா முதலிடம்

துபாய், மார்ச் 12- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் நிறைவடைந்​துள்ள நிலை​யில் பேட்​ஸ்​மேன்​கள் மற்​றும் பந்து வீச்​சாளர்​களுக்​கான தரவரிசை பட்​டியல் வெளியிடப்​பட்​டுள்​ளது. இதில் இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா 875 புள்​ளி​களு​டன் முதலிடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளார். உலகக் கோப்பை இறு​திப் போட்​டி​யில் நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக அபிஷேக் சர்மா அரை சதம் விளாசி​ய​தால் தரவரிசை​யில் சரிவை சந்​திக்​க​வில்​லை. மற்​றொரு அதிரடி வீர​ரான இஷான் கிஷன் 871 புள்​ளி​களு​டன் 2 இடங்​கள் முன்​னேறி 2-வது இடத்தை பிடித்​துள்​ளார். உலகக் கோப்பை தொடரில் இஷான் கிஷன் 317 ரன்​கள் விளாசி​யிருந்​தார். தற்​போது அபிஷேக் சர்​மாவுக்​கும், இஷான் கிஷனுக்​கும் இடையே 4 புள்​ளி​கள் மட்​டுமே வித்​தி​யாசம் உள்​ளது. பாகிஸ்​தான் அணி​யின் தொடக்க வீர​ரான சாஹிப்​சதா பர்​ஹான் ஓர் இடத்தை இழந்து 848 புள்​ளி​களு​டன் 3-வது இடத்​தில் உள்​ளார். இங்​கிலாந்​தின் பில் சால்ட்​டும் ஓர் இடத்தை பறி​கொடுத்து 792 புள்​ளி​களு​டன் 4-வது இடத்​தில் உள்​ளார். இலங்கை அணி​யின் பதும் நிசங்கா 766 புள்​ளி​களு​டன் 5-வது இடத்​தில் தொடர்​கிறார். நியூஸிலாந்து அணி​யின் தொடக்க வீர​ரான டிம் ஷெய்​பர்ட் 749 புள்​ளி​களு​டன் 4 இடங்​கள் முன்​னேறி 6-வது இடத்தை பிடித்​துள்​ளார். இந்​தி​யா​வின் திலக் வர்மா ஓர் இடத்தை இழந்து 742 புள்​ளி​களு​டன் 7-வது இடத்​தில் உள்​ளார். தென் ஆப்​பிரிக்​கா​வின் டெவால்ட் பிரே​விஸ் 738 புள்​ளி​களு​டன் 8-வது இடத்​தில் தொடர்​கிறார். இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 2 இடங்​களை இழந்து 722 புள்​ளி​களு​டன் 9-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளார். இங்​கிலாந்​தின் ஜாஸ் பட்​லர் 716 புள்​ளி​களு​டன் ஓர் இடம் பின்​தங்கி 10-வது இடத்​தில் உள்​ளார். அதே அணி​யைச் சேர்ந்த ஜேக்​கப் பெத்​தேல் 668 புள்​ளி​களு​டன் 17 இடங்​கள் முன்​னேறி 16-வது இடத்தை பிடித்​துள்​ளார்.