
சென்னை: அக்டோபர்14-
கரூர் விவகாரம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவிற்கு பின் விஜய் முக்கியமான போன் கால் ஒன்றை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் இந்த வழக்கில் மேற்கொண்டு ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை செய்ய முடியாது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் 8-வது நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான SIT முக்கியமான பல ஆதாரங்களை திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இனி அந்த குழு விசாரணையை நடத்த முடியாது. கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு கீழ் சென்றது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜகவுடன் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வரும் நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கரூர் வழக்கு விசாரணை இந்த உத்தரவிற்கு பின் விஜய் முக்கியமான போன் கால் ஒன்றை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் விஜய் சார்பாக ஆதவ் அர்ஜுனாவிற்கு போன் சென்றுள்ளது. அதில் வாழ்த்துக்கள்… நீங்கள் சொன்ன மாதிரியே செஞ்சிட்டீங்க.. டெல்லியில் போய் வழக்கை நடத்திக்காட்டுவேன் என்று கூறினீர்கள். அதன்படியே வழக்கை சிபிஐக்கு கொண்டு சென்றுவிட்டீர்கள்.















