Home Front Page News அஞ்சலி செலுத்த டெல்லி சென்ற தமிழக முதல்வர்

அஞ்சலி செலுத்த டெல்லி சென்ற தமிழக முதல்வர்

சென்னை:டிசம்பர் 27-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டிருக்கிறார்.
நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்றிரவு அவசர சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9 மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டிருக்கிறார்.
கடந்த 1932ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் மேற்கு பஞ்சாப்பில் மன்மோகன் சிங் பிறந்தார். இன்று இது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. 1971ம் ஆண்டு வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசகராக இந்திய அரசின் பணியை தொடங்கினார் மன்மோகன். அதன் பின்னர் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், திட்ட கமிஷனின் துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து வந்தார். இதனையடுத்து வி.பி.நரசிம்மராவ் ஆட்சியில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மன்மோகனுக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1991-1996 காலத்தில் மன்மோகன் மத்திய நிதியமைச்சராக இருந்தார். இந்த காலத்தில்தான் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகிய கொள்கைகளை அவர் அமல்படுத்தினார். இதனையடுத்து கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றபோது மன்மோகன் பிரதமராக தேர்வாகினார்.
தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் திரு. மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பேரறிவும், பணிவும், தொண்டும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டித் தொடர்ந்து வழிகாட்டும்” என்று இரங்கல் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டிருக்கிறார். இன்று முதல் தொடர்ந்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version