Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்கத் துணை அதிபராகும் இந்திய மருமகன் – சைவ உணவுக்கு பாராட்டு

அமெரிக்கத் துணை அதிபராகும் இந்திய மருமகன் – சைவ உணவுக்கு பாராட்டு

வாஷிங்டன், நவ. ‘11- இந்தியாவின் சைவ உணவு சிறந்தது. இந்தியாவின் உணவு வகைகளை விரும்பி சாப்பிடுங்கள்’ என துணை அதிபராகும் இந்திய மருமகன் ஜே.டி.வேன்ஸ் தெரிவித்தார்.அமெரிக்க துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ், 40, வெற்றி பெற்றார். இவரின் மனைவி உஷா சிலுகுரி, 38, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். 1986ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். இதனால், துணை அதிபர் ஜே.டி.வேன்சை இந்தியாவின் மருமகன் என இங்கு உள்ளவர்கள் கொண்டாடுகின்றனர். கலிபோர்னியாவின் சான் டியாகோவில் பிறந்த உஷா, யேல் பல்கலையில் சட்டம் பயின்றார். அங்கு அறிமுகமான ஜே.டி.வேன்சை காதலித்து 2014ல் திருமணம் செய்தார்.துணை அதிபராகும் இந்திய மருமகன் ஜே.டி.வேன்ஸ், இந்தியாவின் உணவு வகைகள், மனைவி உஷா சமைத்து தரும் உணவுகள் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது: எனது மனைவி இந்திய- அமெரிக்கர். அவள் செய்யும் சைவ உணவு விதிவிலக்கானது. நான் உங்களுக்கு சொல்கிறேன். நீங்கள் சைவ உணவுகளை எடுத்து கொள்ள விரும்பினால், இந்திய உணவு வகைகளை பின்பற்றுங்கள். இது சுவையாக இருக்கிறது. அரிசியில் செய்யும் உணவுகள், கொண்டைக்கடலையில் செய்யும் உணவுகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுங்கள். மேலும் சிறந்த பல வகையான உணவுகள் உள்ளது. இறைச்சியை விட இந்தியாவின் சைவ உணவுகள் சிறந்தது.நான் என் மனைவியை சந்திப்பதற்கு முன்பு சைவ உணவு உண்பவர்கள் என்ன உணவுகளை தயாரித்து சாப்பிட்டார்கள் என்று தனக்கு தெரியாது. தனது மனைவி தனக்கு முதல் முறையாக சமைத்து தந்த சைவ உணவு மோசமாக தான் இருந்தது. சைவ உணவுகள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு சிறிது நேரம் ஆனது. ஆனால் உண்மையில் இந்திய உணவுகள் சிறந்தது, சுவையானது என்பதை உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version