பெய்ஜிங், ஜூலை 3. அமெரிக்காவில் உளவு பார்த்தாக சொல்லி சீன நாட்டினர் இருவரை எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் டெத் டிராப் பேமெண்ட் மூலம் பணத்தை அனுப்பிப் பல உளவுத் தகவல்களைச் சேகரித்தாக சொல்லப்படுகிறது. இவர்களின் கைது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், சீனா இது குறித்து விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே நல்லுறவு இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது. வரிப் போர் தொடங்கி பல்வேறு வகையிலும் இரண்டு நாடுகளும் மாறி மாறி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே அமெரிக்காவில் உளவு பார்த்தாக சொல்லி இருவர் கைது செய்யப்பட்டனர். சீனா சொல்வது என்ன! இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாகச் சீனா விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இருவரைச் சீன உளவாளிகள் என்று சொல்வது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனச் சீனா கூறியுள்ளது.. இந்த குறித்துக் கேட்டபோது, இந்த வழக்கின் விவரங்கள் தங்களுக்குத் தெரியாது என்றும், ஆனால் சீன குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் கூறுகையில், “இந்த வழக்கின் விவரங்கள் எனக்குத் தெரியாது. ஆனால், ‘சீன உளவாளிகள்’ என்று சொல்வது தவறு. சீன குடிமக்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என்றார். பின்னணி அமெரிக்காவின் ஹாப்பி வேலியைச் சேர்ந்தவர் யுவான்ஸ் சென் (38), அமெரிக்காவின் நிரந்தரக் குடியிருப்பாளரான சென், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை பார்த்ததுள்ளார். அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனுக்கு சுற்றுலா விசாவில் வந்தவர் லிரன் ரையன் லாய் (39). இந்த இருவரையும் இருவரையும் கடந்த வெள்ளிக்கிழமை எஃப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். சீன அரசின் ஏஜெம்டுகளாக இவர்கள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.