Home செய்திகள் உலக செய்திகள் ஆப்கானிஸ்தானை முதல் முறையாக அங்கீரித்த புதின்

ஆப்கானிஸ்தானை முதல் முறையாக அங்கீரித்த புதின்

காபூல், ஜூலை 4- ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானை பல நாடுகளும் இன்னும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் தான், ஆப்கானிஸ்தான் அரசை ரஷ்யா முதல் முறையாக அங்கீகரித்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானுக்கான தூதரை ரஷ்யா அங்கீரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்களை அமெரிக்கா உள்பட பல நாடுகள் பயங்கரவாதிகளாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தாலிபான்கள் உள்நாட்டு போரை தொடங்கி தான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர்.

Exit mobile version