வாஷிங்டன்: ஜனவரி 18:
கடும் குளிர் காரணமாக, பதவியேற்பு விழா, வரும் ஜனவரி 20ம் தேதி 3 மணிக்கு உள் அரங்கத்தில் நடக்கிறது என அமெரிக்கா அதிபர் (தேர்வு) டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்கா அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்திய அரசு சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.இந்நிலையில், பதவியேற்பு விழா குறித்து, டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனவரி 20ம் தேதி அவ்வளவு வேகமாக வர முடியாது. ஆரம்பத்தில் என்னையும், எனது நிர்வாகத்தையும் எதிர்த்தவர்கள் கூட, தற்போது பதவியேற்பு விழா எப்போது நடக்கும் என்று விரும்புகிறார்கள். நம் நாட்டு மக்களைப் பாதுகாப்பது எனது கடமையாகும். பல்லாயிரக்கணக்கான சட்ட அமலாக்கப் பிரிவினர், போலீசார் மற்றும் குதிரைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஜனவரி 20ம் தேதி பல மணி நேரம் வெளியில் இருப்பது ஆபத்தான நிலைமையாகும்.