பெலகாவி, டிச. 19- கர்நாடக மாநிலத்தில் அரசின் சக்தி திட்டம் மூலம் பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை துவக்கியது.இந்தத் திட்டத்தின் பயனால் பெண்கள் 23 சதவீதம் பேர் பயணம் மேற்கொள்ள அதிகரித்துள்ளது. தினமும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்சில் பயணிகள் 93 லட்சமாக இருந்தது. அவை ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் பெண் பயணிகள் 65 லட்சம் பேர் தினமும் சக்தி திட்டத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இந்த திட்டத்தில் பெங்களூர் பெண்கள் மாதத்திற்கு 1,100 முதல் 1,200 ரூபாய்வரை சேமித்துக் கொள்கிறார் கள். மற்ற இடங்களில் பெண்களுக்கு 800 முதல் 900 ரூபாய் வரை இலவச பஸ் மூலம் பயனடைந்து வருகிறார்கள்.கர்நாடக மேலவையில் பஸ் பயணங்கள் குறித்து பிஜேபி உறுப்பினர் எஸ் வி சங்கனூர் தெரிவிக்கையில் பஸ் பயணம் செய்ய, பஸ்களை இயக்க பற்றாக்குறைஏற்பட்டுள்ளது. பஸ்களும் பழுதடைந்துள்ளது. பயணம் செய்வோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஏப்ரல் 2023க்கு முன் புதிய பஸ்கள் வாங்க வில்லை. கடந்த 7 ஆண்டுகளாக பணியாளர்களை நியமிக்கப் படவில்லை. 2024-25 இறுதிக்குள் மொத்தம் 4, 304 பஸ்கள் இயக்கப்படும். இதில் புதியதாக 1,346 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பஸ் இயக்கத்தில் கர்நாடகா 25000, இதனை ஒப்பிடுகையில் தமிழகம் 20,000 மகாராஷ்டிரா 23,000. போக்குவரத்து துறையில் புதியதாக 9,000 பேரை பணிய மர்த்த திட்டம் உள்ளது. இதில் ஏற்கனவே 4, 000 பேர் புதியதாக பணியில் இடம் பெற்றுள்ளனர். பணியமர்த்தும் வேலை நடந்து வருவதாக அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்தார்.