Home Front Page News பழமையான மடத்தில் கொள்ளை 12 பேர் கும்பல் கைது

பழமையான மடத்தில் கொள்ளை 12 பேர் கும்பல் கைது

சிவமொக்கா, ஏப்ரல் 12 –
மிகப் பழமையான மடத்தில் 300 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருப்பதாக நினைத்து 15 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்க சென்றது.ஆனால் அங்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது அதை கொள்ளையடித்து சென்ற கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது தீர்த்தஹள்ளி தாலுகாவில் உள்ள மகிஷி கிராமத்தில் உள்ள பழமையான உத்தராதி மடத்தில் 300 கோடி ரூபாய் ரூபாய் இருப்பதாக நினைத்து ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 15க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் மடத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த அச்சுறுத்தி, ரூ.5000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் மடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
கொள்ளை சம்பவத்திற்கு முன்பு இந்தக் குழு ஒரு முறை மடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எதிர்பார்த்தபடி, ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு, அவர்கள் ஒரு வாகனத்தில் வந்து கொள்ளை அடித்துவிட்டு கொள்ளை கும்பல் தப்பி சென்றது.இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் 12 பேர் வரை கைது செய்து உள்ளனர் அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து .தலைமறைவாக உள்ள மற்ற கொலைகளை பிடிக்க வலை வீசப்பட்டு உள்ளது

Exit mobile version