Home Front Page News பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேர் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: ஜூலை 11 –
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்றனர்.
பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய சிலர், பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்டனர். அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர்.
”பலியானவர்கள் உடல்கள் குண்டுத் துளைத்த காயங்களுடன் மலைகளில் கண்டெடுக்கப்பட்டன” என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த காலங்களில் இதே போன்ற சம்பவங்களின் பின்னணியில் பலூச் படையினர் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பிரிவினைவாத குழுக்கள் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

Exit mobile version