Home செய்திகள் உலக செய்திகள் ‘பாஸ்வேர்டை மாற்றுங்கள்’ 1,600 கோடி ‘லாகின்’ தகவல் கசிவு

‘பாஸ்வேர்டை மாற்றுங்கள்’ 1,600 கோடி ‘லாகின்’ தகவல் கசிவு

சான் பிரான்சிஸ்கோ : ஜூன் 21- உலகளவில், ‘ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான்’ உட்பட பல்வேறு இணைய சேவை பயனர்களின், 1,600 கோடி ‘லாகின்’ தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதில் பலவற்றில் உள்நுழைவதற்கான பாஸ்வேர்டு தகவல்களும் அடங்கியுள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இணையத்தில் அவ்வப்போது பயனர்களின் தகவல்கள் திருடப்படுகின்றன. அந்த தகவல்கள் ‘சைபர்’ குற்றங்கள் மற்றும் வியாபார உத்திகள் வகுக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், தற்போது உலகளவில் மிகப்பெரிய தகவல் திருட்டு நடந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பயனர்கள் பல்வேறு இணைய சேவைகளுக்கு பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகள், பாஸ்வேர்டு போன்றவற்றின், 1,600 கோடி விபரங்கள், ‘டார்க் வெப்’ எனப்படும் மறைமுக இணைய சர்வரில் விற்பனைக்கு வந்துள்ளன. இவை, 30 தனித்தனி தரவு தொகுப்புகளாக கசிந்துள்ளன. ஒவ்வொரு தொகுப்பிலும், பல கோடி தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம் என சர்வதேச இணைய ஆய்வு நிறுவனங்களான, ‘சைபர்நியூஸ்’ மற்றும் ‘கீப்பர் செக்யூரிட்டி’ கூறியுள்ளது.

Exit mobile version