Home Front Page News மதிமுக நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவு

மதிமுக நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவு

சென்னை: ஜூலை 7-
சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்​டி, 25 தொகு​தி​களில் தனி கவனம் செலுத்தி பணி​களை மேற்​கொள்​ளு​மாறு கட்சி நிர்​வாகி​களுக்கு மதி​முக தலைமை உத்​தர​விட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்ளது.
வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்தலில் கடந்த முறையை​விட கூடு​தல் தொகு​தி​களை கேட்​போம் என திமுக கூட்​டணி கட்​சிகள் தொடர்ந்து கூறிவரு​வது திமுக தலை​மை​யிடம் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.
இதனால், ‘கூட்​டணி கட்​சி​யில் இருந்து விலகிவருபவர்​களை திமுக​வில் சேர்ப்​ப​தில்​லை’ என்ற கொள்​கை​யில் இருந்து வில​கி, மதி​முக நிர்​வாகி​களை சமீபத்​தில் சேர்த்​துக் கொண்​டது திமுக. இது மதி​முக​வுக்கு மட்​டுமின்றி மற்ற கூட்​டணி கட்​சிகளுக்​கும் அதிர்ச்​சியை கொடுத்​துள்ளது.
ஏற்​கெனவே, வைகோவுக்கு மாநிலங்​களவை உறுப்​பினர் பதவி வழங்​கப்​ப​டாத நிலை​யில், திமுக​வின் இந்த நடவடிக்கை மதி​முக தொண்​டர்​களிடம் கடும் எதிர்ப்புஅலைகளை ஏற்​படுத்​தி​யது. பொதுக்​குழு உள்​ளிட்ட ஆலோசனை கூட்​டங்​களில் நிர்​வாகி​கள் இதை காட்​ட​மாகவே வெளிப்​படுத்​தினர். எனினும், ‘தி​முக​வுடன் கூட்​டணி தொடரும்’ என திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்த வைகோ, தொண்​டர்​களை​யும் சமா​தானம் செய்து வரு​கிறார்.இதற்​கிடையே, மதி​முக முதன்மை செய​லா​ளர் துரை வைகோவை மத்​திய அமைச்​ச​ராக்​கும் முயற்​சி​யில் வைகோ ஈடு​படு​வ​தாக தகவல் பரவியது. இதை உறுதி செய்​யும் வகை​யில், “சில திமுக கூட்​டணி கட்​சிகள் எங்களோடு பேசி வரு​கின்​றன” என்று மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​க​னும் தெரி​வித்​திருந்​தார்.இதை தொடர்ந்​து, சென்னை அறி​வால​யத்​தில் முதல்​வர் ஸ்டா​லினை வைகோ கடந்த 2-ம் தேதி சந்​தித்​து, பாஜக​வுடன் எந்த பேச்​சு​வார்த்​தை​யும் இல்லை என்பதை திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​தார். இந்த நிலை​யில், 25 தொகு​தி​களில் களப்​பணி​களை தீவிரப்​படுத்​து​மாறு நிர்​வாகி​களுக்கு தலைமை உத்​தர​விட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இதுகுறித்து மதி​முக நிர்​வாகி​கள் கூறும்​போது, “மதி​முக மாநாடு, மண்டல வாரி​யான செயல்​வீரர்​கள் கூட்​டம் ஆகிய​வற்​றில் கவனம் செலுத்தி வரு​கிறோம். இதை தொடர்ந்​து,அனைத்து தொகு​தி​களி​லும் வாக்​குச்​சாவடி முகவர்​கள் கூட்​டத்தை நடத்த உள்​ளோம். இதில், 25 தொகு​தி​களில் தனி கவனம் செலுத்த வேண்​டும் என்று தலைமை உத்​தர​விட்​டுள்​ளது. கட்சி அங்​கீ​காரத்தை பெறும் வகை​யில் 8 தொகு​தி​களில் வெற்றி பெற வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருக்​கிறோம். அதேநேரம், இந்த விஷ​யத்​தில் இறுதி முடிவை தலைமை எடுக்​கும்” என்​றனர்.

Exit mobile version