Home செய்திகள் உலக செய்திகள் ‘பிஹார் மாநிலத்தின் மகள்’ – டிரினிடாட் பிரதமர் கம்லாவுக்கு மோடி பாராட்டு

‘பிஹார் மாநிலத்தின் மகள்’ – டிரினிடாட் பிரதமர் கம்லாவுக்கு மோடி பாராட்டு

போர்ட் ஆப் ஸ்பெயின்: ஜூலை 5- டிரினி​டாட் பிரதமர் கம்லா பெர்​ஷத், பிஹார் மாநிலத்​தின் மகள் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்​டி​யுள்​ளார். பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு நடை​பெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார். இதை முன்​னிட்டு கானா, டிரினி​டாட் அண்ட் டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய 4 நாடு​களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்​கட்​ட​மாக கானா நாட்​டுக்கு கடந்த 2,3-ம் தேதிகளில் சுற்​றுப் பயணம் செய்​தார். கானா பயணத்தை முடித்​துக் கொண்டு டிரினி​டாட் அண்ட் டொபாகோ நாட்​டுக்கு பிரதமர் மோடி முதல்​முறை​யாக சென்​றுள்​ளார். டிரினி​டாட் பிரதமர் கம்லா அழைப்​பின் பேரில் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார். கரீபியன் கடல் பகு​தி​யில் உள்ள 2 தீவு​கள் அடங்​கிய நாடு​தான் டிரினி​டாட் அண்ட் டொபாகோ. வெனிசுலா நாட்​டுக்கு அரு​கில் இந்த நாடு உள்​ளது. இந்த நாட்​டின் பிரதம​ராக கம்லா பெர்​ஷத் பிசெஸ்​ஸார் பதவி வகிக்​கிறார். இவரை பிரதமர் மோடி நேற்று சந்​தித்​தார். இந்​தி​யர்​கள் பங்​கேற்ற கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசும்​போது, ‘‘டிரினி​டாட் பிரதமர் கம்லா பெர்​ஷத், பிஹார் மாநிலத்​தின் மகள்’’ என்று புகழ்ந்​தார். பிஹார் மாநிலத்​தின் பக்​சார் மாவட்​டத்​துக்​கும், கம்​லா​வுக்​கும் உள்ள மூதாதையர் தொடர்பு குறித்து புகழ்ந்து பேசி​னார். அதே​போல, பிரதமர் மோடியை​யும் கம்லா பாராட்டி பேசி​னார். மோடி எழு​திய ‘ஆங்க் ஆ தன்யா சே’ என்ற கவிதை நூலில் இருந்து சில கவிதைகளை​யும் கூறி​னார். முதல் பெண் பிரதமர்: டிரினி​டாட்​டின் தென் பகு​தி​யில் உள்ள சிபாரியா என்ற பகு​தி​யில் கடந்த 1952 ஏப்​ரல் 4-ம் தேதி பிறந்​தவர் கம்​லா. இந்த நாட்​டின் முதல் அட்​டர்னி ஜெனரல், பெண் எதிர்க்​கட்சி தலை​வர், முதல் பெண் பிரதமர் என்ற பெரு​மைக்​குரிய​வர். சிறந்த வழக்​கறிஞ​ராக, அரசி​யல் தலை​வ​ராக திகழ்​பவர். கடந்த 2010 முதல் ஐக்​கிய தேசிய காங்​கிரஸ் கட்​சி​யின் தலை​வ​ராக இருக்​கிறார். கடந்த 1995-ல் சிபாரியா தொகு​தி​யில் போட்​டி​யிட்டு எம்​.பி.​யா​னார். அதன்​பிறகு, கல்​வித் துறை அமைச்​சர் உட்பட பல்​வேறு கேபினட் பதவி​களை வகித்​தார். இவரது முன்​னோர்​கள் பிஹார் மாநிலம் பக்​சார் மாவட்​டத்​தில் உள்ள பேலுபூர் கிராமத்​தில் வசித்​தவர்​கள். கடந்த 2012-ல் கம்லா தனது சொந்த கிராமத்​துக்கு வந்​தார். அப்​போது பாரம்​பரிய நாட்​டுப்​புறப் பாடல்​கள் பாடி,மலர் மாலை அணி​வித்து மக்​கள் உற்​சாக​மாக வரவேற்​றனர். அப்​போது அவர், ‘‘என் சொந்த வீட்​டுக்கு வந்​தது ​போல உணர்​கிறேன்’’ என்று நெகிழ்ச்​சி​யுடன் கூறி​னார்.

Exit mobile version