குன்னூர்,ஜூலை 8-
குன்னூரில் மது பிரியர்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் கிராஸ்பஜார் பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி வங்கிகள், வழிபாட்டு தளங்கள் போன்றவைகள் அப்பகுதியில் உள்ளதால் எப்போதும் கிராஸ் பஜார் பகுதி பரபரப்பாகவே காணப்படும்.
இதற்கிடையே மவுண்ட் ரோடு, கிராஸ் பஜார் போன்ற பகுதிகளில் மதுபிரியர்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கிராஸ் பஜார் பகுதியில் வரும் மதுபிரியர்கள் மது போதையில் தள்ளாடி கீழே விழுவதும், பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இடையூறாக போதையில் நடைப்பாதையில் படுத்து உறங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர் சஜீவன் கூறுகையில் ‘‘மது போதையால் நடைபெறும் சமூக குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொது வெளிகளில் மது அருந்துவதை கட்டுப்படுத்துவதில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும்.