Home Front Page News இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு

இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு

ஜெய்சால்மர்: ஜூலை 1 –
விசா மறுக்​கப்​பட்​ட​தால் சட்​ட​விரோத​மாக எல்லை கடந்து இந்​தியா வந்த, பாகிஸ்​தான் தம்​ப​தி​தார் பாலை​வனத்​தில் பரி​தாப​மாக உயி​ரிழந்த சம்​பவம் நடந்​துள்​ளது. பாகிஸ்​தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்​டம் மிர்​பூர் மத்​தல்லோ பகு​தி​யைச் சேர்ந்​தவர் ரவிக்​கு​மார் (17). இவரது மனைவி சாந்​தி​பாய் (15). இவர்​களுக்கு கடந்த 4 மாதங்​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது.
இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் ரவிக்​கு​மாருக்கு சரி​யான வேலை இல்லை. இந்​தி​யா​வுக்​குச் சென்​றால் நல்ல வேலை கிடைத்து மனை​வி​யுடன் சுக​மாக வாழலாம் என ரவிக்​கு​மார் நினைத்​தார். இதற்​காக இரு​வரும் விசா கேட்டு விண்​ணப்​பித்​தனர். ஆனால் விசா மறுக்​கப்​பட்​டது. இதையடுத்​து, இவர்​கள் சட்​ட​விரோத​மாக எல்​லை​யைக் கடந்து ராஜஸ்​தானுக்​குள் வந்​தனர். ஜெய்​சால்​மர் பகு​தி​யிலுள்ள தார் பாலை​வனத்​தின் வழி​யாக இவர்​கள் பயணித்​த​போது இறந்​து​ விட்​டனர்.
போதிய குடிநீர் அவர்​களுக்​குக் கிடைக்​க​வில்​லை. மேலும், உடலில் நீர்ச்​சத்து குறைந்​ததன் காரண​மாக இவர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். அதி​கப்​படி​யான தாகத்​தால் அவர்​கள் உயி​ரிழந்​திருக்​கலாம் என போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர். இவர்​களது சடலங்​கள் கடந்த சனிக்​கிழமை கிடைத்​துள்​ளன. இதுகுறித்து ஜெய்​சால்​மர் போலீஸ் எஸ்​.பி. சுதிர் சவுத்ரி கூறும்​போது, “தார் பாலை​வனத்​தி​லுள்ள பிபி​யான் பகு​தி​யில் இவர்​களது உடல்​கள் கிடைத்​துள்​ளன.
பாகிஸ்​தானிலிருந்து வரும்​போது இவர்​கள் குடிப்​ப​தற்​காக பெரிய அளவி​லான குடிநீர் கேனை கொண்டு வந்​துள்​ளனர். குடிநீர் தீர்ந்​து​விட்​ட​தால் அதி​கப்​படி​யான தாகத்​தால் அவர்​கள் தவித்​துள்​ளனர். கடைசி வரை உயிருக்​காகப் போராடி இறந்​து​விட்​டனர். அவர்​களது உடல் அருகே காலி​யான குடிநீர் கேன் இருந்​துள்​ளது” என்​றார்.
இதுகுறித்து ராஜஸ்​தானிலுள்ள இந்து – பாகிஸ்​தானி புலம்​பெயர்ந்​தோர் யூனியன் மற்​றும் எல்​லை​யோர மக்​கள் அமைப்​பின் மாவட்ட ஒருங்​கிணைப்​பாளர் திலீப் சிங் சோதா கூறும்​போது, “இரு​வரின் உடல்​களை​யும் இந்​திய அரசு ஒப்​படைத்​தால் அதை ஏற்​றுக்​கொண்டு அவர்​களுக்கு இறு​திச் சடங்கு செய்ய ரவிக்​கு​மாரின் உறவினர்​கள் பாகிஸ்​தானில் காத்​திருக்​கின்​றனர். ஒரு​வேளை உடல்​களை ஒப்​படைக்​கா​விட்​டால், இந்து மதத்​தின்​படி அங்கு சடங்​கு​களை அவர்​கள்​ செய்​துவிடுவர்​’’ என்​றார்​.

Exit mobile version